மென்பொருள் கனவு
Friday, June 29, 2007
மென்பொருள் கனவு என்ற தலைப்பில் என்னுடைய வேலை தேடிய படலத்தை விளக்க உள்ளேன்.
விரைவில்.........
மென்பொருள் கனவு என்ற தலைப்பில் என்னுடைய வேலை தேடிய படலத்தை விளக்க உள்ளேன்.
விரைவில்.........
சற்று முன் "ஆவி வழி அரசியலுக்கு அடிபோடும் பிரதீபாஜி!" என்ற blog ஒன்னு படிசங்க. இப்படி இருந்தா எப்படிங்க நாடு முன்றேறும். பேசாம ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நேரடியா மக்கள் குடுத்தா நல்லா இருக்கும், ஆனால் மக்கள் எத்தனை தடவதான் ஒட்டு போட வெண்டியிருக்கும் பாருங்க..
Read more...அலுவலகத்தில் வேலை இல்லை என்பதற்காக நண்பனிடம் அடித்த அரட்டை...
அடா! உங்களுக்கும் வேலை இல்லையா?
2:54 PM me: கடந்த காலம் மற்றும் எதிர்க்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்
mahendra.prabu: good
2:55 PM நாளைகளைச் சேமிக்கும் அவசரத்தில் இன்றை அல்லவா அன்றாடம் தொலைக்கிறோம்.
2:58 PM me: எதிபாராத ஆபத்துக்களை சந்திக்க நாளைய தினத்தை குறித்து சிந்திக்க வேண்டும்
mahendra.prabu: பாவிகளை இரட்சிப்பதாய் பாவத்திற்கு பரிந்துரை செய்தது யார்?
3:00 PM மதுரையைக் காப்பது மீனாட்சி. அவளைக் காப்பது மெட்டல் டிடெக்டர்.
3:02 PM me: மீனாட்சி குடியிருப்பது மதுரையில் அல்ல ஒவ்வொருவரின் மனதினில் !
mahendra.prabu: என் மனதில் இல்லை..
3:04 PM me: நம்பினோர்க்கு கடவுள் கல்லை கூட பொன்னாக்குவார் !
3:05 PM mahendra.prabu: இல்லாத கடவுளால் எப்படி செய்ய முடியும்?
3:06 PM நீயென்பதொன்றே நிஜம்..
3:08 PM me: கடவுள் இல்லை என்பவனிடம் வாதடுவது, செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி !
3:09 PM mahendra.prabu: how?
3:10 PM me: கடவுள் இல்லை என்பவனிடம் வாதடுவது, செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி !
3:12 PM mahendra.prabu: மனிதன் தன் அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்களுக்கு காரணம் கடவுள் என்று சொல்கிறான்..நான் அதை அறியாமை என்று சொல்கிறேன்..
3:13 PM கடவுள் இருக்கிறது என்பவனிடம் வாதடுவதும் செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரிதான்..
3:15 PM திருத்தம்..கடவுள் இருக்கிறது என்பவனிடம் வாதடுவதுதான் செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி.
3:16 PM me: நீ அறியாமை என்று சொல்லுவது அறிவுக்கு அப்பாற்பட்ட விசயத்தையா அல்லது அதை கூறியனையா?
3:18 PM mahendra.prabu: கடவுள் இருக்கிறார் என்று சொல்வது அறிவிற்கு அப்பாற்பட்டதுதானே..
3:19 PM me: அறிவிற்கு அப்பாற்பட்டு நம்புவத்துதான் கடவுள்
3:20 PM mahendra.prabu: அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததுதானே..
3:21 PM அது நம்பிக்கை..நம்பிக்கை உண்மை ஆகுமா?
3:24 PM என்னைப் பொருத்தவரை கடவுளைப் படைத்தது மனிதன்.
3:25 PM me: நம்பிக்கை வைத்ததால்தான் Narayanamoorthi Infosys யை நிறுவினார் !
3:30 PM நம்பிக்கை இல்லை எனில் வாழ்க்கை இல்லை
mahendra.prabu: ஆம்..தன்னம்பிக்கை இருந்தால் நம்மால் முடியும்..கடவுள் நம்பிக்கையால் சோம்பேறித்தனம் தான் கூடும்..
3:32 PM me: தன்னம்பிக்கை மட்டும் போதாது க்டவுள் நம்பிக்கையும் வேண்டும்
mahendra.prabu: தன்னம்பிக்கை இருக்கும்போது கடவுள் நம்பிக்கை தேவையில்லை..
3:33 PM me: எதிர்பாராதா ஆபத்திற்க்கு கடவுள்தான் அடைக்கலம்
3:34 PM mahendra.prabu: அது நமது மனத் திருப்திக்காகவே..
3:36 PM ஆபத்திலிருந்து பிழைத்துக் கொண்டால், கடவுள் காப்பாற்றினார் என்பாய்..இல்லையென்றால் கடவுள் கைவிட்டுவிட்டார் என்பாய்..
3:37 PM அவ்வளவு தானே..
me: உண்மைதானே!
mahendra.prabu: அது உண்மையல்ல..நம்பிக்கை..
3:38 PM me: நம்பிக்கைதான் உண்மைக்கு ஆதாரம்
3:39 PM mahendra.prabu: யாரும் நம்பிக்கையை ஆதாரமாக எடுத்துக்கொள்வதில்லை..
3:40 PM அது நம்பிக்கையாகவே எடுத்துக்கொள்ளப்படும்..
3:41 PM me: நம்பிக்கையை ஆதாரமாக எடுப்பதுதான் வாழ்க்கை
3:42 PM mahendra.prabu: சும்மா ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்க்காக சொல்கிறாய்..
3:43 PM நம்பிக்கையால் தான் வாழ்க்கை
3:45 PM வாழ்க்கைக்கு தேவையானதை நம்பினால் போதும்..
3:47 PM என்னடா வேலை இல்லையா?
3:48 PM me: ஏன் உன்னக்கு இல்லையா?
3:49 PM mahendra.prabu: எனக்கு வேலை இருக்கு..அதுக்கு நிறைய நேரம் தேவையில்லை.. வேலையையும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன்..
3:51 PM me: உன்ன மாதிரி உள்ளவனை திருத்துவதுதான் என்னுடய வேலை
3:52 PM mahendra.prabu: அப்படியானால், திருந்தவேண்டியது நீ தான்..
3:55 PM me: ஆம் உன்ன மாதிரியான ஆளை திருத்தவே முடியாது என்று நான் திருந்த வேண்டும்
3:57 PM mahendra.prabu: சரி..இருக்கட்டும்..என்னிடம் என்ன திருத்த வேண்டும் என நினைக்கிறாய்..?
3:59 PM அது சரி என்று பட்டால் திருத்திக் கொள்கிறேன்..
4:00 PM me: நான் உன்னிடம் திருந்த வரவில்லை, மாறாக உன்னை திருத்த முடியவில்லை என்று நான் என்னை நிறுத்திக்கொண்டேன்(அடுத்தவரை திருத்துவதில் இருந்து...)
4:01 PM mahendra.prabu: அதானால் தான் கேட்கிறேன்..நான் எந்த விசயத்தில் திருந்தவேண்டும்..?
அது சரி என்று பட்டால் திருத்திக் கொள்கிறேன்..
4:02 PM me: மேலே நான் சொன்ன விஷயத்தை படித்து பார் புரியும்
4:03 PM mahendra.prabu: கடவுளை நம்பவேண்டும் என்கிறாயா? ஏன் என்று கேட்கிறேன்.
4:04 PM me: ஏன் என்று கேட்காமல் நம்புதுதான் கடவுள்
mahendra.prabu: அல்ல..அது மடமை..
4:05 PM me: பசித்தால் ஏன் என்று கேட்ட சாப்பிடுகிறாய்?
4:06 PM mahendra.prabu: இல்லை..ஏனென்றால் பசிக்கிறது, சாப்பிடவேண்டும்..
4:07 PM கடவுளை ஏன் நம்பவேண்டும்?
me: நம்ப வேண்டும் அதனால் நம்ப வேண்டும்
4:08 PM mahendra.prabu: அதற்கு எந்த ஒரு தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை..
கடவுளைப் படைத்தது மனிதன்
4:10 PM me: ஆக வயிற்று பசியை உன்னால் அறிய முடிகிறது ஆனால் கடவுளை தேடும் உன் மனப்பசியை உன்னால் அறிய முடியவில்லை
4:12 PM mahendra.prabu: என் மனது கடவுளைத் தேடவில்லையே..இல்லையென்று அதற்க்குத் தெரிந்துவிட்டது..
4:17 PM me: இல்லை உன் மனதுக்கு தெரிவது உன் அறிவுக்கு எட்டவில்லை....உன் சிந்தனை மனதை ஒட்டியிருக்க பழகிக்கொள்...
4:19 PM mahendra.prabu: மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உண்டு..எந்த ஒரு விசயத்திற்கும் காரணம் என்னவென்று அறியும் சக்திதான் ஆறாவது அறிவு..பகுத்தறிவு..எதையும் தெரியும் என்று சொன்னவனுக்கு அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்களை விளக்கத் தெரியவில்லை..அதைத் தெரியாது என்று சொல்ல அவனுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை..அதனால் தான் கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி, அதை எல்லாரும் நம்புவதற்க்காக பல கதைகளையும் சொல்கிறான்..
4:21 PM இதுதான் நீ உருவாக்கியதன் காரணம்..
correction..இதுதான் நீ கடவுளை உருவாக்கியதன் காரணம்..
4:23 PM நீ சொல்வதெல்லாம் கதை..
4:24 PM ஆதாரம் இல்லாதவை..
4:25 PM me: போதும் நிறுத்திக்கொள் உன் விதண்டா வாதத்தை.... உன்னிடம் வாதிடுவது செவிடன் காதில் ஊதின சங்கு மாதிரி.
4:26 PM mahendra.prabu: சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை..
4:27 PM me: ஆம் நீர் சொல்லுவதை கேட்காத மடப்பிள்ளை.....
4:30 PM mahendra.prabu: உண்மை சுடுகிறதா?
4:32 PM me: ஆம் உண்மையை மறுக்கும் உன்னால் சுடப்படுகிறது !
4:33 PM mahendra.prabu: எதையும் தெரியும் என்று சொன்னவனுக்கு அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்களை விளக்கத் தெரியவில்லை..அதைத் தெரியாது என்று சொல்ல அவனுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை..
4:35 PM me: தெரியாத ஒன்றை தெரிய மறுப்பது ஈகோவால்தான்...
4:37 PM mahendra.prabu: புரியும்படி சொல்
4:38 PM me: புரியாத மடப்பயளுக்கு புரிய வைப்பது மடத்தனம்
4:39 PM mahendra.prabu: அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்களை தெரியாது என்று தானே சொல்ல வேண்டும்..
நீ நன்றாக சமாளிக்கிறாய்..
4:40 PM புரியாதவனுக்குத் தான் புரிய வைக்க வேண்டும்..
me: தெரியா விட்டால் தெரிந்து கொள்ளுவதில் தவரில்லை
4:41 PM mahendra.prabu: அதை ஏன் மடத்தனம் என நினைக்கிறாய்..
you told..புரியாத மடப்பயளுக்கு புரிய வைப்பது மடத்தனம்
4:42 PM புரியாதவனுக்குத் தான் புரிய வைக்க வேண்டும்..அதை ஏன் மடத்தனம் என நினைக்கிறாய்..
me: ஆனால் தெரியாமல் பிதற்றுகிறவனை என்னவென்று சொல்லுவது....
mahendra.prabu: ?
4:43 PM தனக்குத் தெரியும் என நினைப்பது நீ தான்..
4:44 PM me: புரியாதவனுக்குத் தான் புரிய வைக்க வேண்டும் ஆனால் புரிந்தும் புரியவில்லை என்று சொல்லுபவனை என்ன சொல்லுவது?.. மடப்பயல் தானே!
4:45 PM mahendra.prabu: புரியவில்லை என்று நான் சொல்லவில்லை..
4:46 PM me: mahendra.prabu: புரியும்படி சொல்
இது என்ன?
4:47 PM mahendra.prabu: rajadurai80: தெரியாத ஒன்றை தெரிய மறுப்பது ஈகோவால்தான்...
enpathai vilakkach sonneen
4:54 PM mahendra.prabu: தெரியாத ஒன்றை எப்படித் தெரிந்துகொள்ள முடியும் என்கிறாய்..?
4:57 PM கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால் தெரியாது என்று சொல்வதுதானே சரி..
4:59 PM me: சரிதான்
5:26 PM mahendra.prabu: ok..nice chatting with you..
5:47 PM mahendra.prabu: என்ன துரை..பிஸியா?
me: ஆம்
5:48 PM mahendra.prabu: சரி..அப்ப வேலையப் பாரு..
© Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008
Back to TOP